சிக்கமகளூருவில் வருகிற 21–ந்தேதி உலக யோகா தினம் கொண்டாட்டம் கலெக்டர் சத்தியவதி தகவல்

சிக்கமகளூருவில் வருகிற 21–ந்தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதாக கலெக்டர் சத்தியவதி தெரிவித்தார்.

Update: 2017-06-10 21:00 GMT

சிக்கமகளூரு,

சிக்கமகளூருவில் வருகிற 21–ந்தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதாக கலெக்டர் சத்தியவதி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு கலெக்டர் அலுவலகத்தில், சிக்கமகளூருவில் உலக யோகா தினம் கொண்டாடப்படுவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சத்தியவதி தலைமை தாங்கினார். இதில் யோகா பயிற்றுனர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் சிக்கமகளூருவில் உலக யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் சத்தியவதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உலக யோகா தினம்

சிக்கமகளூருவில் வருகிற 21–ந்தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிக்கமகளூரு விஜியாபுரா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை யோகா பயிற்சி நடக்க உள்ளது. அதைதொடர்ந்து காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை யோகா பற்றிய கருத்தரங்கமும் நடக்க உள்ளது. இதில் யோகா பயிற்றுனர்கள், அரசியல் பிரமுகர்கள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

யோகா செய்வதன் மூலம் மன நிம்மதி, உடல் ஆரோக்கியம் பெறலாம். எனவே சிக்கமகளூரு மாவட்ட பொதுமக்கள் இந்த யோகா நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக உலக யோகா தினத்தை முன்னிட்டு 17–ந்தேதி (சனிக்கிழமை) சிக்கமகளூருவில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலம் சிக்கமகளூரு பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு எம்.ஜி.ரோடு வழியாக சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தை சென்றடைகிறது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்