இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு நெல்லையில் 1362 பேர் எழுதினர்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடங்களுக்கான செயல் அலுவலர் பதவி நிலை–3 மற்றும் நிலை 4–க்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவ

Update: 2017-06-10 20:30 GMT

நெல்லை,

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடங்களுக்கான செயல் அலுவலர் பதவி நிலை–3 மற்றும் நிலை 4–க்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு பாளையங்கோட்டை கதீட்ரல், சாராள்தக்கர், சவேரியார், மேரிசார்ஜென்ட், டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 849 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1362 பேர் தேர்வு எழுதினர். 1487 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் எட்வர்ட் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர். இந்த தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் தேர்வுக்கு நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 294 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்