மனித விசேஷ இயல்பு, குரங்குகளிலும்!

உலக உயிரினங்களிலேயே தனித்துவம் மிக்கவர்கள் என்று மனிதர்களாகிய நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதற்கு நமது தனித்துவமான இயல்புகளைச் சுட்டிக்காட்டுகிறோம்.

Update: 2017-06-10 09:43 GMT
லக உயிரினங்களிலேயே தனித்துவம் மிக்கவர்கள் என்று மனிதர்களாகிய நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். அதற்கு நமது தனித்துவமான இயல்புகளைச் சுட்டிக்காட்டுகிறோம்.

உதாரணமாக, மொழித் திறன், ஆறாவது அறிவு போன்றவற்றைக் கூறலாம்.

ஆனால் நாளுக்கு நாள் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புகளால், மனிதனின் தனித்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. காரணம், மனிதனைப் போல மற்ற விலங்குகளிலும் சிறப்பியல்புகள் காணப்படுவதுதான்.

அவ்வாறே தற்போது மற்றுமொரு மனித இயல்பு குரங்குகளிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது.

இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குரங்கின் மூளையில் உள்ள நரம்பு வலையமைப்பை ‘பங்ஷனல் மேக்னட்டிக் ரிசோனன்ஸ் இமேஜிங்’ முறையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

மேலும் செய்திகள்