எட்டிமரத்துபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் தர்ணா போராட்டம்
எட்டிமரத்துபட்டியில் மதுக்கடையை மூடக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
நல்லம்பள்ளி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எட்டிமரத்துபட்டியில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த பகுதி வழியாக 50 குக்கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் சென்று வருகிறார்கள். மதுக்கடையை கடந்து செல்லும்போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக இந்த மதுக்கடையை மூடக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதன்பிறகும் இந்த மதுக்கடை மூடப்படவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் அங்கு மது விற்பனை நடந்து வந்தது. இதனால் அந்த மதுக்கடை முன்பு நேற்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் திரண்டனர். மதுக்கடையை மூடக்கோரி அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் தர்ணா போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த டாஸ்மாக் தனி தாசில்தார் கருணாநிதி, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கர், வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த மதுக்கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் அப்போது உறுதியளித்தனர்.
இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக எட்டிமரத்துப்பட்டி மதுக்கடை நேற்று மூடப்பட்டது.