2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியாக பா.ஜனதாவை எதிர்கொள்ளும் சச்சின் பைலட் சொல்கிறார்

2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியாக பா.ஜனதாவை எதிர்கொள்ளும் என்று சச்சின் பைலட் செல்கிறார்.

Update: 2017-06-09 23:00 GMT

மும்பை,

2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் ஒரே அணியாக பா.ஜனதாவை எதிர்கொள்ளும் என்று சச்சின் பைலட் செல்கிறார்.

ஒரே அணியாக

மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலன் கூறியதாவது:–

பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒரே அணியாக திரட்டும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது. அடுத்த 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக ஒன்றாக செயல்படவேண்டியதன் அவசியத்தை அனைத்து கட்சிகளும் தற்போது தான் உணர்ந்துள்ளன.

அவர்கள்(பா.ஜனதா) வாய் பேச்சில் மிகவும் புத்திசாலிகள், ஆனால் அவர்கள் பேச்சு தகுந்த முடிவுகளை நம்மால் பார்க்வே முடியாது.

சிவசேனா

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கூட்டணியில் இருந்துகொண்டே பா.ஜனதா அரசை குறை கூறி வருகிறது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சினையில் அரசுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்கள் பதவி அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

சிவசேனா மத்திய மற்றும் மாநில ஆட்சி குறித்து இரண்டு வெவ்வேறு மொழிகளில் பேசுகிறது. அவர்களுக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், தங்கள் பதவி அதிகாரத்தை துறக்க ஏன் தயாராக இல்லை? இதன்மூலம் இரு கட்சிகளும் ஒரே கொள்கை கொண்டவை தெளிவாக தெரிகிறது.

அவர்களால் வெற்று அச்சுறுத்தல்களை மட்டுமே கொடுக்க முடியும் அதிகாரத்தை விட்டு விலக மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்