மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நீடாமங்கலத்தில் மாடுகளுடன் பெண்கள் பங்கேற்றனர்.
திருவாரூர்,
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்தும், மாடுகள் விற்பனை செய்வது மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு உரிய தண்ணீர் பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் அருகே மாவூர் கிளை தபால் நிலையம் முன்பு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் இடும்பையன், மாவட்டக்குழு உறுப்பினர் மாதவன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், திருவாரூர் நகர செயலாளர் சோமசுந்தரம், மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கொரடாச்சேரி தபால் நிலையம் முன்பு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பரமசிவம் தலைமையிலும், குளிக்கரை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மாட்டு இறைச்சிக்கான தடையை நீக்கிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் தபால் நிலையம் முன்பு நீடாமங்கலம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கைலாசம், சங்க மாவட்ட துணைச்செயலாளர் ரெத்தினம், ஒன்றிய செயலாளர் நாகூரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாடுகளுடன், 50 பெண்கள் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் காளிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.