சுவையான சுவாரசியங்கள் : சுண்டெலியின் பாடல்
ஜாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையில், சுண்டெலிகள் பாட்டுப் பாடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஜாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையில், சுண்டெலிகள் பாட்டுப் பாடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆண் சுண்டெலிகள், பெண் சுண்டெலிகளைக் கவர்வதற்காக இந்தப் பாடல்களைப் பாடுகின்றனவாம். ஆனால் சுண்டெலி பாடுவதை சாதாரணமாக மனிதர்களால் கேட்க இயலாது என்கிறார்கள் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பாடும் பறவைகளைப் போல, ஆண் சுண்டெலி பெண் சுண்டெலிக் காகப் பாடுகிறது. பெண் சுண்டெலி வருவதை உணர்ந்தவுடனோ, பார்த்தவுடனோ வேறு ஒரு பாட்டுக்கு மாறிவிடுகிறது என்கிறார்கள். அதாவது தனது இணையை அலைந்து திரிந்து தேடி சக்தியை வீணாக்காமல், பாடி அழைக்கிறது ஆண் சுண்டெலி.
அதிசய மழை
மழை என்பதே ஆனந்தமும், ஆச்சரியமும் கலந்ததுதான். அதுவும் இந்தியாவில் நிகழும் சில மழைப்பொழிவுகள் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கின்றது. கேரளாவில் விசித்திரமான சிவப்பு மழை பொழிகிறது. அங்கு மழைத் துளிகள் சிவப்பு நிறத்தில் ரத்த மாதிரியில் மண்ணை நனைக்கின்றன. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில், மீன் மழை பொழிகிறது. பாலைவன தூசிகள் சிவப்பு மழையை பொழிவிக்க, கடல் பரப்பில் இருந்து உருவாகும் புயல்கள் கடல் மீன்களையும் சுருட்டியபடி மீன் மழையை பொழியச் செய்கிறது.
நீலநிற மனிதர்கள்
அவதார் திரைப்படத்தில் வரும் கற்பனை கதாபாத்திரங்களை போன்றே, நிஜத்திலும் நீல நிற மனிதர்கள் இருக்கிறார்கள். ‘கென்டக்கி’ பகுதியில் வசிக்கும் ‘புல்கேட்’ என்பவரது சந்ததியினர் நீல நிறத்தில் இருக்கிறார்கள்.
ஆச்சரியமாக இருந்தாலும், அதற்கு மரபணு குறைப்பாடு என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
செய்தித்தாள்களின் காதலர்!
சீனாவின் குவாங்ஸி பகுதியில் வசிக்கும் 74 வயது சீ ஜிலின், கடந்த 36 ஆண்டுகளாகச் செய்தித்தாள்களைச் சேகரித்து வருகிறார். கூடம், படுக்கையறைகள், சேமிப்பு அறை என்று வீட்டில் உள்ள 7 அறைகளிலும் செய்தித்தாள்கள் மேற்கூரையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது சமையலறையிலும் சேமிக்க ஆரம்பித்திருக்கிறார்.
‘நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். எழுதுவதில் ஆர்வம் அதிகம். எங்கள் பகுதி நாடகக் குழுவில் இணைந்து கதை, வசனம் எழுத ஆரம்பித்தேன். என்னால் அதில் தனித்துவத்தைக் காட்ட முடியவில்லை. அன்று முதல் என் திறமையை வளர்த்துக் கொள்வதற்காகச் செய்தித்தாள்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சில மாதங்களிலேயே என்னுடைய எழுத்தில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. செய்தித்தாள் வாசிப்பதால் பொதுஅறிவு பெருகியது. அதை என்னுடைய எழுத்துகளில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. பல்வேறு நாடகப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றேன். கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற எந்த நிகழ்வையும் இந்தச் செய்தித்தாள்களின் துணைகொண்டு எழுதிவிட முடியும். ஓய்வுபெற்ற பிறகு செய்தித்தாள்கள், பத்திரிகைகள் அனைத்தையும் வாங்குவதற்குச் சிரமமாக இருக் கிறது. ஆனாலும் என்னால் வாங்காமல் இருக்க முடியாது. என்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு சமாளித்து வருகிறேன்’ என்கிறார் சீ ஜிலின்.
பொம்மை வழங்கும் சிறுவன்
தாஸ்மேனியாவில் வசிக்கும் 12 வயது சிறுவன், கேம்பல் ரிமெஸ். இவன் இதுவரை 800 பொம்மைகளை, நோயாளி குழந்தை களுக்கு வழங்கியிருக்கிறான். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க விரும்புவதாகவும், பொம்மைகளை வாங்கித் தரும்படியும் தன் பெற்றோரிடம் கேட்டான் கேம்பல். ஆனால் பெற்றோரால் கேம்பல் கேட்ட பரிசுகளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஆனாலும் கேம்பலின் இரக்க குணத்தை ஊக்குவிக்கும் வகையில், வீட்டிலேயே ஓவியங்கள் வரைந்து, பரிசாக அளிப்போம் என்றார் அம்மா சோனியா. ஆனால் கேம்பலுக்கு அதில் விருப்பம் இல்லை.
இணையதளங்களில் வீட்டிலேயே பொம்மை செய்வது எப்படி என்பதைத் தேடிப் படித்தான். வெகுவிரைவில் அவனே பொம்மைகளைத் தயார் செய்ய ஆரம்பித்தான்.
‘தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதோ, விளையாடுவதோ கிடையாது. படிப்பை விட்டால் பொம்மை செய்யக் கிளம்பிவிடுவான். ஒரு மணி நேரத்தில் ஒரு பொம்மை செய்யும் அளவுக்குத் தேர்ந்துவிட்டான். தாஸ்மேனியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்குப் பொம்மைகளை அனுப்பி வருகிறான்’ என்கிறார் கேம்பலின் அம்மா சோனியா.
பல மொழி வித்தகர்
முகமது மெசிக் 56 மொழிகளைச் சரளமாகப் பேசவும், 14 மொழிகளைப் புரிந்துகொள்ளவும் கூடியவராக இருக்கிறார்! யுகோஸ்லாவாகியாவைச் சேர்ந்த முகமதுவுக்கு, 5 வயதிலேயே மொழிகளை வேகமாகக் கற்றுக் கொள்ளும் திறன் வந்துவிட்டது.
‘ஐந்து வயதில் கிரேக்க நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். எனக்கு அறிமுகம் இல்லாத மொழி பேசுபவர்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். சுற்றுலாவின் இறுதி நாளில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. டிரைவர், மெக்கானிக் ஆகியோருடன் கிரேக்க மொழியில் நான் பேசியதைக் கண்டு என் குடும்பமே அதிர்ந்து போனது. என் அப்பா அலுவலக ரீதியாகப் பல நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். உறவினர்கள் பல நாடுகளில் இருந்ததால், அங்கும் மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டே வாரங்களில் யூ டியூப், 2 புத்தகங்கள், 43 கார்ட்டூன்கள் மூலம் பால்டிக் மொழியைக் கற்றுக் கொண்டேன். ஒரு சில மொழிகளைக் கற்றுக்கொண்டால், அவற்றுடன் கொஞ்சம் வித்தியாசப்படும் பல மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். இதனால் 56 மொழிகளை பேச முடிகிறது’ என்கிறார் முகமது மெசிக்.
பாடும் பறவைகளைப் போல, ஆண் சுண்டெலி பெண் சுண்டெலிக் காகப் பாடுகிறது. பெண் சுண்டெலி வருவதை உணர்ந்தவுடனோ, பார்த்தவுடனோ வேறு ஒரு பாட்டுக்கு மாறிவிடுகிறது என்கிறார்கள். அதாவது தனது இணையை அலைந்து திரிந்து தேடி சக்தியை வீணாக்காமல், பாடி அழைக்கிறது ஆண் சுண்டெலி.
அதிசய மழை
நீலநிற மனிதர்கள்
ஆச்சரியமாக இருந்தாலும், அதற்கு மரபணு குறைப்பாடு என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
செய்தித்தாள்களின் காதலர்!
சீனாவின் குவாங்ஸி பகுதியில் வசிக்கும் 74 வயது சீ ஜிலின், கடந்த 36 ஆண்டுகளாகச் செய்தித்தாள்களைச் சேகரித்து வருகிறார். கூடம், படுக்கையறைகள், சேமிப்பு அறை என்று வீட்டில் உள்ள 7 அறைகளிலும் செய்தித்தாள்கள் மேற்கூரையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது சமையலறையிலும் சேமிக்க ஆரம்பித்திருக்கிறார்.
பொம்மை வழங்கும் சிறுவன்
தாஸ்மேனியாவில் வசிக்கும் 12 வயது சிறுவன், கேம்பல் ரிமெஸ். இவன் இதுவரை 800 பொம்மைகளை, நோயாளி குழந்தை களுக்கு வழங்கியிருக்கிறான். 3 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க விரும்புவதாகவும், பொம்மைகளை வாங்கித் தரும்படியும் தன் பெற்றோரிடம் கேட்டான் கேம்பல்.