பாம்பன் ரோடு பாலத்தில் கார் மீது பஸ் மோதி 5 பேர் படுகாயம்

ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு பாம்பன் ரோடு பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடைமேடையில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின்கம்பம் முறிந்தது. தொடர்ந்து அந்த பஸ் நிற்காமல் அந்த வழியாக தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் இருந்து ராமேசுவரம் வந்த கார் மீது பஸ் மோதி நின்றது. பஸ்சின் முன்புறம் கண்ணாடி உடைந்தது. கார் சேதமடைந்து அதில் இருந்த டிரைவர் சிவசண்முகம், சண்முகநாதன், பவானி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.