திருப்பூரில் வேன் மோதியதில் மின்கம்பங்கள் சேதம் மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு
திருப்பூரில் வேன் மோதியதில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதன்காரணமாக மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூரில் இருந்து மங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திருப்பூர் கருவம்பாளையம் அருகே நேற்று மதியம் 12 மணி அளவில் வந்த போது திடீரென்று அந்த வேனின் மேல்பகுதி ரோட்டின் குறுக்காக சென்ற மின்கம்பிகளில் மோதி இழுத்துச்சென்றது. வேகமாக வேன் சென்றதால் மின்கம்பிகள் இழுத்ததில் சாலையோரம் இருந்த இரும்பு மின்கம்பம் ஒன்று அப்படியே வளைந்தது. அருகில் நின்ற மற்றொரு இரும்பு மின்கம்பமும் அப்படியே சரிந்து நின்றது. மின்கம்பிகள் ரோட்டில் விழுந்தன.
இதைப்பார்த்த அந்த பகுதி கடைக்காரர்கள் சத்தம் போட்டனர். இதனால் வேன் டிரைவர் வேனை நிறுத்தினார். உடனடியாக இது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பழுதடைந்த 2 மின் கம்பங்களையும் சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். ரோட்டோரம் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் நின்றதால் வாகனங்கள் ரோட்டில் மெதுவாக சென்றன. இதனால் மங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, வளைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். இதற்கான செலவுத்தொகையை சம்பந்தப்பட்ட வேன் டிரைவரிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் மின்சாரம் தடைபட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.