மலேசியாவில் 26 பொறியியல் பட்டதாரிகள் வேலை, உணவின்றி பரிதவிப்பு இந்தியா கொண்டு வர நடவடிக்கை
மலேசியாவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 26 பொறியியல் பட்டதாரிகள் வேலை, உணவின்றி பரிதவித்தனர். இதனை அறிந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்களை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
நாகர்கோவில்,
நெய்யூரை அடுத்த நெல்லியரைகோணம் விஜயகுமார் மகன் பிஜோ, கல்குறிச்சி வாழவிளை தாமஸ் மகன் தருண் ஜோஸ், தக்கலை புலியூர்குறிச்சி அய்யப்பன் மகன் தானேஷ், நெல்லியரைகோணம் சுந்தர் மகன் ஜாஸ்பர் புஷ், நெய்யூர் வடக்கு ஆழ்வார்கோவில் வர்கீஸ் மகன் டயற்றஸ், நாகர்கோவில் சகோதரர் தெரு கோபாலகிருஷ்ணன் மகன் தினேஷ், மேக்கோடு வலியவிளை கிறிஸ்டோபர் மகன் அஜீவ் ஜட்சன், மேக்காமண்டபம் வின்சென்ட் மகன் நிபின் மஜ்ஜோ உள்பட 30 பேர் இரணியலை சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒருவரின் மூலமாக மலேசியா வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 30–ந் தேதி மலேசியா சென்றனர். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 26 பேர்.
இந்தியா கொண்டு வர நடவடிக்கை
அங்கு அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல் சித்ரவதை செய்யப்படுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் மலேசியா கோலாலம்பூரில் உள்ள உள்ள இந்திய தூதரகத்தையும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து மலேசியாவில் பரிதவிக்கும் 30 பேரையும் இந்தியா கொண்டு வர கேட்டு கொண்டுள்ளார்.
இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரித்து தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்தனர். விரைவில் 30 பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக மலேசியா கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.