நோயால் அவதிப்பட்ட முதியவர் 9–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

நோயால் அவதிப்பட்ட முதியவர் 9–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-06-07 22:15 GMT

மும்பை,

நோயால் அவதிப்பட்ட முதியவர் 9–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொண்டையில் கட்டி

மும்பை காலசவுக்கியில் உள்ள அரம் டவர் என்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 9–வது மாடியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் ஜெயந்த் அமர்சந்த்(வயது62).

இவருக்கு தொண்டையில் கட்டி வளர்ந்து இருந்தது. இதனால் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும் அவரது நோய் சரியாகவில்லை. இதனால் ஜெயந்த் அமர்சந்த் மனஉளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.

குடும்பத்தினரிடம் சரியாக பேசவில்லை. இந்தநிலையில் நேற்று காலை திடீரென வீட்டு ஜன்னல் வழியாக கீழே குதித்துவிட்டார்.

தற்கொலை

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காலசவுக்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரேல் கே.இ.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், ‘‘எனது நோயால் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். என்னால் எனது குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. இனி எனக்கு வாழ இஷ்டம் இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்