பண்ருட்டியில் நடக்க இருந்த மாட்டுவண்டி தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

பண்ருட்டியில் நடக்க இருந்த மாட்டுவண்டி தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Update: 2017-06-07 22:15 GMT

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே காமாட்சிபேட்டையில் உள்ள கெடிலம் ஆற்றில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்காக மணல் குவாரி திறக்கக்கோரி கடலூர் மாவட்ட ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மணல் குவாரி திறக்கப்படாததை கண்டித்து 7–ந்தேதி(அதாவது நேற்று) பண்ருட்டி தாசில்தாரிடம் மாட்டுவண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையில் பண்ருட்டி தாசில்தார் விஜய்ஆனந்த், ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினரை தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து நேற்று காலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பண்ருட்டி போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காமாட்சிபேட்டையில் மணல் குவாரி இயங்கி வருவதாகவும், அக்கடவல்லி, சிறுவத்தூர், சந்நியாசிபேட்டை ஆகிய இடங்களில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற மாட்டு தொழிலாளர்கள், தாங்கள் நடத்த இருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

மேலும் செய்திகள்