வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு.

Update: 2017-06-07 21:23 GMT
பொன்னேரி,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்