புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டம்
தஞ்சை அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தேசிய, மாநில நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனால் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளை குடியிருப்புகள், வயல்வெளிகளில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சில இடங்களில் மதுக்கடைகளை சூறையாடி வருகின்றனர். தஞ்சையை அடுத்த கத்தரிநத்தம் கிராமத்தில் வயல்வெளியில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மனைக்கு மத்தியில் கடந்த 5-ந் தேதி புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது.
வயல்வெளி பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதை அறிந்து வெளியூர்களில் இருந்து மதுபிரியர்கள் மதுக்கடைக்கு படையெடுத்தனர். இவர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்று சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதால் அந்த வழியாக பெண்கள் செல்வதற்கே அச்சப்பட்டனர். இதனால் நேற்று காலை மதுக்கடையை மூட வலியுறுத்தி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12 மணிக்கு கடையை திறப்பதற்காக கடை ஊழியர்கள் வந்தனர். ஆனால் கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மீறி கடையை திறந்தால் மதுக்கடையை அடித்து நொறுக்கிவிடுவதாக மிரட்டினர். இதனால் கடையை பணியாளர்கள் திறக்கவில்லை.
பேச்சுவார்த்தை
இந்த தகவலை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் அரங்ககுரு மற்றும் ஊர் பெரியவர்கள், மதுக்கடையால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். கடை விரைவில் அப்புறப்படுத்தப் படும் என போலீசார் உறுதி அளித்ததால் பெண்கள் உள்பட அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து பெண்கள் சிலர் கூறும்போது, கத்தரி நத்தம், குளிச்சப்பட்டு, வாளமரக்கோட்டை, மருங்கை, தளவாய்ப்பாளையம், ராராமுத்திரைக்கோட்டை, காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் மதுக்கடை அருகே செல்லும் சாலையை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. ரெயில்வே நிலையம் உள்ளது. மதுக்கடை திறக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்வதற்கே அச்சமாக உள்ளது. ஆங்காங்கே சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துகிறார்கள். பெண்கள், மாணவர்கள் கடந்து செல்லும்போது ஆபாசமாக பேசுகிறார்கள். இரவு நேரங்களில் இந்த பகுதியில் பெண்கள் சென்றால் அவர்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. தற்போது பள்ளிக்கூடம் திறந்துவிட்டது. மாணவிகள் பலர் இந்த சாலையின் வழியாக பள்ளிகளுக்கு சென்று வருவார்கள். இதனால் மதுக்கடையை மூட வேண்டும். அப்படி மூடவில்லை என்றால் கடையை அடித்து நொறுக்குவோம் என்றனர்.