அரியலூர், ஜெயங்கொண்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-06-07 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் பானுபிரியா முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சரவணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலரின் தொல்லையால், பணியின் போது உயிரிழந்த சென்னை பெரம்பூர் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் மதன்பிரபு மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மதன்பிரபு குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது சாவுக்கு காரணமான மாவட்ட வருவாய் அலுவலரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் செயற்குழு உறுப்பினர் காமராஜ் நன்றி கூறினார். இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க வட்ட தலைவர் குமரையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தினை மாவட்ட பொருளாளர் குமணன் தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் பாக்கியம் விக்டோரியா, மாவட்ட துணை தலைவர் சம்பத் ஆகியோர் பேசினர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்