பெண்ணிடம் தங்க சங்கிலிகள் பறித்த திருச்சி வாலிபர் கைது

கரூர்,
கரூர் பசுபதிபாளையம் அருகே நரிகட்டியூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி பரமேஸ்வரி(வயது35). இவர் கடந்த மே மாதம் 29-ந்தேதி தனது வீட்டின் அருகே உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென பரமேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 9½ பவுன் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து விசாரித்தனர். அதில் திருச்சி மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த குட்ட பாலு என்கிற பாலசுப்பிரமணி (35) சம்பவத்தன்று பரமேஸ்வரியிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பசுபதிபாளையம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது கூட்டாளி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.