அறுவை சிகிச்சை மூலம் எனது கணவரை கொலை செய்ய சதி

அறுவை சிகிச்சை மூலம் எனது கணவரை கொலை செய்ய சதி அட்டாக் பாண்டி மனைவி பேட்டி

Update: 2017-06-07 22:45 GMT

மதுரை,

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை என்ற பெயரில் அட்டாக் பாண்டியை கொலை செய்ய சதி நடப்பதாக அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

அட்டாக் பாண்டி

தி.மு.க. பிரமுகர் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக்பாண்டிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அட்டாக் பாண்டியின் மனைவி தயாள், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் எனது கணவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இருக்கும் நோய் பாதிப்புகள் தொடர்பாக டாக்டர்கள் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருக்கு நாளை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரது மனைவி என்ற முறையில், அறுவை சிகிச்சைக்கு என்னிடம் அனுமதி வாங்கவில்லை. எனவே அறுவை சிகிச்சை என்ற பெயரில் எனது கணவரை கொலை செய்ய சதி நடக்கிறது.

சந்திக்க மறுப்பு

மேலும் எனது கணவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது இல்லை. நர்சுகள் தான் சிகிச்சை அளிக்கின்றனர். மனைவியான என்னைக்கூட அவரை சந்திக்க அனுமதி மறுக்கின்றனர். காலை 10 மணிக்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கடிதம் கொடுத்தும் மாலை 5 மணிக்கு தான் சந்திக்க அனுமதித்தனர். மேலும் காவல்துறையினர் சூழ்ந்து நின்றவாறு 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்