நெல்லை மாவட்டத்தில் 1,658 குளங்களில் மண் எடுக்க அனுமதி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் 1,658 குளங்களில் பொதுமக்கள் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
நெல்லை,

மண் எடுக்க அனுமதி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், விவசாய நிலங்களின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசியதாவது:–
பொதுமக்கள், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், சவுடு, களிமண் மற்றும் கிராவல் ஆகிய கனிமங்களை வெட்டி எடுத்து பயன்படுத்த தமிழக அரசால் திருத்திய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மண் அளவு
இதன்மூலம் பொதுமக்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கு 30 கன மீட்டர் அதாவது 10 டிராக்டர் லோடு மண் அளவும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் அதாவது 20 டிராக்டர் லோடு மண்ணும் எடுத்துக் கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டுக்கு நஞ்சை நிலத்தை மேம்படுத்த 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்துக்கு 75 கன மீட்டர் (25 டிராக்டர் லோடு) மண்ணும், புஞ்சை நிலத்துக்கு 1 ஏக்கர் நிலத்துக்கு 90 கன மீட்டர் (30 டிராக்டர் லோடு) கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களை அணுகி, விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
1,658 குளங்கள்
நெல்லை மாவட்டத்தில் 1,658 குளங்களில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள குளங்கள் குறித்து தாசில்தார் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் மண் எடுக்க அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். மேலும் பொக்லைன் மூலம் மண் வெட்டி எடுத்துச் செல்லவும், டிராக்டர், லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் மண் எடுத்துச் செல்லவும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி, உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), ராஜேந்திரன் (தென்காசி), மைதிலி (நெல்லை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமசுப்பிரமணியன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.