மாணவர்கள் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரம் வினியோகம்
கண்ணமங்கலத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளை சேர்ந்து படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில் மாணவ – மாணவிகளை சேர்ந்து படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேலாயுதம் தலைமையில் ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். மேலும் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் திருநாவுக்கரசு, கண்ணமங்கலம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சோழராஜன், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.