மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அந்தந்த ஒன்றியங்களில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
இந்தநிலையில் 2 மாதங்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
இதில் சுமார் 300–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.