துல்லியமான கணிப்புகளுக்கு ஸ்மார்ட்பேட்

கணினித் தொழில்நுட்பம் அறிமுகமான பின்பு, விளையாட்டு ரசிகர்களுக்கு ஏராளமான சுவாரஸ்ய தகவல்கள் திரட்டித் தரப்படுகின்றன.

Update: 2017-06-07 07:08 GMT
கிரிக்கெட் விளையாட்டில் பந்து சரியாக ஸ்டம்புகளுக்குச் சென்றதா, விலகிச் சென்றிருக்குமா? வீரர் சரியாக கோட்டை தொட்டாரா? இல்லை விக்கெட்டை இழந்தாரா? என்பது போன்ற தகவல்களை சரியாக கணிக்க முடிவதுடன், ஒருவர் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியவிதம், மற்ற போட்டிகளுடன் ஒப்பிடப்பட்டு கணப்பொழுதில் தகவல்கள் கணிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்கப்படுகிறது.

இன்னும் துல்லியமான தரவுகளைத் தருவதற்காக இப்போது ஸ்மார்ட் ‘பேட்’ மட்டைகள் வந்துவிட்டன. அத்துடன் பறந்தபடி கண்காணிக்கும் டிரோன்களும் கிரிக்கெட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ளன. கணினித் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ‘இன்டெல்’ நிறுவனம் இந்த ஸ்மார்ட்பேட்களுக்கான சிப் மற்றும் டிரோன்களுக்கான கருவிகளை தயாரித்து வழங்கி உள்ளது.

இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிரோபி போட்டிகளிலேயே இந்த தொழில்நுட்பம் செயல்படுத்திப் பார்க்கப்படுகிறது. பேட் மட்டையில் உள்ள சென்சார் கருவியானது பந்து எந்த இடத்தில் பட்டது, என்ன வேகத்தில் மட்டை சுழற்றப்பட்டது, அதற்கு ஏற்ப பந்து எந்த கோணத்தில், எவ்வளவு தூரம் பறக்கும் என்பது போன்ற துல்லியமான கணிப்புகளைச் செய்யலாம். அத்துடன் பந்து நகரும் திசைக்கேற்ப டிரோன்களை வேகப்படுத்தி இயக்கி ரசிகர்களுக்கு வித்தியாசமான காட்சிகளை விருந்து படைக்கலாம்!

மேலும் செய்திகள்