இப்தார் நோன்பு திறப்பு முஸ்லிம்களுக்காக சிவசேனா சார்பில் இலவச பஸ் சேவை மும்ராவில் தினசரி மாலை இயக்கப்படுகிறது

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முஸ்லிம்களுக்காக மும்ராவில் தினசரி மாலை சிவசேனா சார்பில் இலவச பஸ் சேவை இயக்கப்படுகிறது. நோன்பு தானே மும்ராவில் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அதிலும் மும்ரா ரெயில் நிலையத்தில் இருந்து நக

Update: 2017-06-06 22:06 GMT

தானே,

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முஸ்லிம்களுக்காக மும்ராவில் தினசரி மாலை சிவசேனா சார்பில் இலவச பஸ் சேவை இயக்கப்படுகிறது.

நோன்பு

தானே மும்ராவில் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அதிலும் மும்ரா ரெயில் நிலையத்தில் இருந்து நகருக்குள் ஆட்டோக்களை இயக்கும், பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் ஆவர். தற்போது ரம்லாம் மாதம் என்பதால் முஸ்லிம்கள் நோன்பிருந்து தொழுகை நடத்தி வருகிறார்கள். மாலையில் நோன்பு திறக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து முஸ்லிம் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே ஓய்வுக்கு சென்று விடுகிறார்கள்.

இலவச பஸ் சேவை

இதன் காரணமாக மும்ரா ரெயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் ஆட்டோக்கள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். இதில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் சூழல் உண்டானது. இதையடுத்து அவர்களின் நலன் கருதி சிவசேனா கட்சியின் போக்குவரத்து பிரிவு சார்பில், மும்ரா ரெயில் நிலையத்தில் இருந்து சீல்பாட்டா வரையிலும் இலவச பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மும்ராவை சேர்ந்த சிவசேனா தலைவர் ஹாஜி அபராபத் சேக் கூறுகையில், ‘‘ ரெயில் நிலையத்தில் இருந்து செல்ல முடியாமல் சிரமப்படும் முஸ்லிம்கள் இப்தார் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்னதாகவே தங்களது வீடுகளை சென்றடையும் வகையில் இந்த இலவச பஸ் சேவை சிவசேனா சார்பில் இயக்கப்படுகிறது ’’ என்றார்.

மேலும் செய்திகள்