குமரி மாவட்டத்தில் மழை: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.

Update: 2017-06-06 22:15 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பல ஆண்டுகள் காணாத வறட்சியை இந்த ஆண்டு சந்திக்க நேரிட்டது. இதனால் அணைகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் அனைத்துமே வறண்டு காட்சி அளித்தது. கடந்த சில தினங்களாக மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 7.2, பெருஞ்சாணி– 2, சிற்றார் 1– 20, சிற்றார் 2– 6, சுருளோடு– 1, கன்னிமார்– 2.2, பாலமோர்– 52.2, புத்தன் அணை– 1.6 என்ற அளவில் மழை பதிவானது. நேற்று நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலும், மேகமூட்டமாக காட்சி அளித்தது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

 தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 548 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 67 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 214 கன அடி தண்ணீரும், சிற்றார் –1 அணைக்கு 26 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 71 கன அடி தண்ணீரும் வருகிறது. சிற்றார்–2 அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 10.90 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 11.50 அடியாகவும், 23.95 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 25.90 அடியாகவும், 2.03 அடியாக அடியாக இருந்த சிற்றார்–1 அணையின் நீர்மட்டம்  2.16 அடியாகவும், 2.13 அடியாக இருந்த சிற்றார்–2 அணையின் நீர்மட்டம்  2.26 அடியாகவும் உயர்ந்தன.

2 அடி உயர்வு

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் அரை அடிக்கும் மேலாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடி வரையிலும் உயர்ந்துள்ளன.

மேலும் செய்திகள்