ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது

ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்னங்கரை காப்புக்காடு அடுத்த நாயக்கனூர் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 2 பேர் வனத்துறையினரை கண்டதும் ஓடினார்கள்.
அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் மான் வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து மான் வேட்டையாடியதாக நல்லவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 34), செந்தில் (30) ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.