மதுக்கடையை மூட வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே மதுக்கடையை மூட வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூரில் மதுக்கடை இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாதர் சங்கத்தினர் மதுக்கடையை மூட வலியுறுத்தி மதுக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சுஜாதா, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கமல்ராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் (பொறுப்பு) மதியழகன், டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு மாதர்சங்கத்தினர் கலைந்து சென்றனர்.