பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-06-06 22:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கடனுதவி, சுகாதார வசதி, ரே‌ஷன்கார்டு, கல்வி உதவித்தொகை என மொத்தம் 229  கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000–ற்கான ஓய்வூதிய ஆணைகளை வழங்கினார். 

அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மணிலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்