பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் வீட்டில் மத்திய மந்திரி பியூஸ்கோயல் உணவு சாப்பிட்டார் அரசியல் நோக்கம் இல்லை என்று பேட்டி
பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் வீட்டில் மத்திய மந்திரி பியூஸ்கோயல் உணவு சாப்பிட்டார். இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று அவர் கூறினார்.
பெங்களூரு,

வாழ்நாளில் மறக்க முடியாது
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் ஹொங்கசந்திராவில் உள்ள ஒரு ஆதிதிராவிடர் காலனிக்கு மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஸ்கோயல் நேற்று சென்றார். அங்கு பா.ஜனதாவை சேர்ந்த ஆதிதிராவிட தொண்டர் ஒருவரின் வீட்டில் உணவு சாப்பிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எனது சொந்த சகோதர-சகோதரியின் வீட்டில் சாப்பிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. இதை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இல்லை.
இட ஒதுக்கீடு
எனது வாழ்க்கையில் மிகவும் ருசியான உணவை நான் சாப்பிட்டேன். ஒருவேளை நான் இங்கு வந்திருக்காவிட்டால் இங்கு சாப்பிட்ட அனுபவம் எனக்கு கிடைக்காமல் போய் இருக்கும். எனது வாழ்க்கையில் உண்மையிலேயே இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவின்படி நான் இங்கு வந்துள்ளேன்.
ஆதிதிராவிட மக்கள் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக அனைவரும் ஆதார் அட்டை, வங்கி கணக்கை பெற வேண்டும். இட ஒதுக்கீடு 100-க்கு 100 சதவீதம் தொடர்ந்து அமல்படுப்படும். ஆதிதிராவிடர்கள் இந்த விஷயத்தில் பயப்பட தேவை இல்லை.
இவ்வாறு பியூஸ்கோயல் கூறினார்.
தூய்மை பணி
முன்னதாக பியூஸ்கோயல் பொம்மனஹள்ளியில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார். அவரே துடைப்பத்தை எடுத்து குப்பைகளை கூட்டினார். இதில் பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.