கார் ஓட்ட பழகியபோது விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்.

Update: 2017-06-06 21:30 GMT
சென்னை, 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 55). மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நேற்று காலை கார் ஓட்ட பழகி கொண்டு இருந்தார். அப்போது காரில் ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதிலாக ‘ஆக்சிலேட்டரை’ தவறுதலாக பாலச்சந்திரன் அழுத்தி விட்டார்.  இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதோடு நிற்காமல் அருகில் இருந்த நடைபாதை தடுப்பின் மீதும் வேகமாக மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் காரை ஓட்டி வந்த பாலச்சந்திரனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை மெரினா சர்வீஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்