நீதியை நிலை நாட்டுவது மட்டும் கடமையல்ல, சமூக பணியாற்றுவதும் தலையாய கடமை

நீதியை நிலை நாட்டுவது மட்டும் கடமையல்ல, சமூக பணியாற்றுவதும் தலையாய கடமை என்று நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம் கூறினார்.

Update: 2017-06-05 22:45 GMT
நாகர்கோவில்,

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் டி.வி.எஸ்.பிள்ளை தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மகிளா கோர்ட்டு நீதிபதியுமான ஜான் ஆர்.டி.சந்தோசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் நடுவது அவசியம். மரங்கள் நடுவதை மக்களிடையே ஊக்குவித்தல் வேண்டும். நீதியை நிலை நாட்டுவது மட்டும் கடமையல்ல, சமூக பணியாற்றுவதும் தலையாய கடமை. மனித வாழ்வு என்பது சுற்றுச் சூழலோடு இணைந்து காணப்படு கிறது. கட்டாயத்துக்காக ஒரு மரத்தை வெட்டினால், அந்த மரத்துக்கு பதிலாக வேறு இடங்களில் 100 மரக்கன்றுகளை நட வேண்டும். மாணவ-மாணவிகள் மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டுதல் அவசியமான ஒன்று” என்றார்.

மரக்கன்றுகள் நடப்பட்டன

இதில் சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் பசும்பொன் சண்முகையா, கோர்ட்டு நிர்வாக அதிகாரி மனோகரன், பேராசிரியர்கள் அருணாசலம், எட்வின், சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும் செய்திகள்