கடலூரில், ஈஷா பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா

கடலூரில், ஈஷா பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா கலெக்டர் ராஜேஷ் பங்கேற்பு

Update: 2017-06-05 21:45 GMT

கடலூர்,

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடலூர் ஈஷா பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, பசுமை கரங்கள் ஒருங்கிணைப்பாளரும், வள்ளிவிலாஸ் உரிமையாளருமான பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஈஷா பசுமை கரங்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர். கடலூரில் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணை மூலம் இந்த ஆண்டு 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் கடலூர், சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் நடப்படுகிறது என்று ஒருங்கிணைப்பாளர் பாலு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்