இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்ததை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்ததை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி,
இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை விதித்ததை கண்டித்து பவானி அந்தியூர் பிரிவு சாலையில் பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கதிர்வேலு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் ரங்கசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகர செயலாளர் ஸ்ரீகுமார் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.