தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர் சங்கத்தினர் கைது
மாட்டு இறைச்சிக்கான தடையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
மதுரை,
மாட்டு இறைச்சிக்கான தடையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாட்டுக்கறியுடன் மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, மாவட்ட தலைவர் வேலுதேவா, செயலாளர் செல்வா தலைமையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாட்டுக்கறியுடன் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து மாநில குழு உறுப்பினர் கல்பனா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.