மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்
வத்தலக்குண்டுவில் அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டுவில் அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு த.மு.மு.க. நகர செயலாளர் சேக்தாவூத் தலைமை தாங்கினார். ஐ.என்.எல். மாநில செயலாளர் வதிலை இஸ்மாயில் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ நகர தலைவர் அரசுமைதீன் வரவேற்றார்.
போராட்டத்தின் போது இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்தும், தடையை நீக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தில் முஸ்லிம் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.