மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட 15 பேர் கைது

மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினரை கைது செய்ததை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-06-03 22:15 GMT
மயிலாடுதுறை,

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட முயன்றதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் லெலினிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழுவினர் மீது அரசு அடக்குமுறையை கண்டித்து போராட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினர்.

கைது

இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுகுபேந்திரன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு பொறுப்பாளர் பன்னீர்செல்வம், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்புமகேஷ், தமிழக நிலம், நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெலினிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் வீரசெல்வம் உள்ளிட்ட போராட்டக்குழுவை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்