சென்டிரல் ரெயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் சிரமம்
சென்டிரல் ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையை பயன்படுத்தாமல் சாலையை கடந்து பொதுமக்கள் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சென்னை,
சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்வது சென்டிரல் ரெயில் நிலையம். இங்கு இருந்து பல ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளிலும் வேலைக்கு செல்வோர் சென்டிரலுக்கு வந்து அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். சென்டிரல் அருகே பாரிமுனை, பூங்காநகர் ரெயில் நிலையம் என அமைந்துள்ளதால் எந்நேரமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்டிரல் பகுதி காணப்படுவது வழக்கம்.
அருகிலேயே சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவக்கல்லூரி உள்ளதால், ஏராளமான நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பஸ்-ரெயில் மூலம் சென்டிரலுக்கு வந்து செல்கின்றனர். இப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான சென்டிரலில் போக்குவரத்து பாதிப்பு கருதி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
சாலையை கடந்து...
ஆனால் இந்த சுரங்கப்பாதையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கிடையாது. அலுவலகங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லவேண்டும் என்ற அவசரத்தில் சென்டிரல் பஸ் நிலையத்தில் இருந்து அப்படியே மெயின் ரோட்டை கடந்து செல்கின்றனர். காலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மெயின் ரோட்டை கடந்து செல்கின்றனர். சாலையை கடக்கவேண்டாம் என்ற எச்சரிக்கை வாசகங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை.
சுரங்கப்பாதையை பயன்படுத்துங்கள் என்ற போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கையையும் காற்றில் பறக்கவிட்டு பொதுமக்கள் சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பல்லவன் சாலை மற்றும் பாரிமுனை வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மாநகர பஸ்களும் மெதுவாகவே வருகின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
திருந்த வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “போக்குவரத்து இடையூறு ஏற்படாமல், பாதுகாப்பான பயணத்துக்காக ஏற்படுத்தப்பட்டதே சுரங்கப்பாதைகள். ஆனால் அதனை பொதுமக்கள் பயன்படுத்துவது கிடையாது. போக்குவரத்து போலீசாரும் இதனை தடுக்க முடியாமல் தவிப்படைந்து வருகின்றனர். எனவே உடனடி நடவடிக்கைகளை போலீசார் கையாள வேண்டும்”, என்றனர்.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், “எவ்வளவு அறிவுரைகள் கூறினாலும் மக்கள் கேட்பதாக இல்லை. கூட்டம் கூட்டமாக சாலையின் முனையில் வந்து நிற்கிறார்கள். போக்குவரத்து பாதிக்கக்கூடாது என்பதிலும், சாலையை கடக்கும் பொதுமக்களுக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதாலும், நாங்களே பொதுமக்கள் சாலையை கடக்க உதவி செய்யவேண்டியது உள்ளது. ஆபத்தை உணர்ந்து பொதுமக்களாக திருந்தினால் மட்டுமே இந்த நிலை மாறும்”, என்றனர்.