மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதித்துள்ள மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து, பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-03 19:47 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை விதித்துள்ள மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து, பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, மாநில பொறுப்பாளர்கள் வீர.செங்கோலன், சீனிவாசராவ், மன்னர்மன்னன், திருமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்க.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்