விநாயகர் சதுர்த்தியையொட்டி 142 சிறப்பு ரெயில்கள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை – கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு 142 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2017-06-02 23:25 GMT

மும்பை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை – கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு 142 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

142 சிறப்பு ரெயில்கள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி 142 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து மத்தியரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

ஆகஸ்ட் 18–ந் தேதி முதல் செப்டம்பர் 10–ந் தேதி வரை சி.எஸ்.டி.யில் இருந்து தினமும் அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:01445) அதே நாள் மதியம் 1.30 மணிக்கு கோவாவில் உள்ள கர்மாலி சென்றடையும். இந்த ரெயில் தாதர், தானே, பன்வெல், ரோகா உள்ளிட்ட பல ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கர்மாலி – புனே

இதே ரெயில் (வண்டி எண்:– 01446) மறுமார்க்கத்தில் கர்மாலி – புனே இடையே இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 18–ந் தேதி முதல் செப்டம்பர் 10–ந் தேதி வரை கர்மாலியில் பிற்பகல் 3.25–க்கு புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு புனே சென்றடையும். இந்த ரெயில் பன்வெல், லோனவாலாவில் நின்று செல்லும்.

இதுதவிர புனே – சாவந்த்வாடி, சாவந்த்வாடி – சி.எஸ்.டி., தாதர் – சாவந்த்வாடி, எல்.டி.டி. – சாவந்த்வாடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்