முதல்–மந்திரியின் உதவியாளர் என கூறி போலீசாரிடம் பணமோசடி செய்த 4 பேர் கைது
முதல்–மந்திரியின் உதவியாளர் என கூறி போலீசாரிடம் பணமோசடி செய்த 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
முதல்–மந்திரியின் உதவியாளர் என கூறி போலீசாரிடம் பணமோசடி செய்த 4 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் மோசடிமும்பையில் பணிபுரியும் போலீசார்களுக்கு பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி, வித்யாசாகர் மற்றும் ரவீந்திர யாதவ் ஆகிய 2 பேர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் தென்மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பதுங்கி இருந்தபோது அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் முதல்–மந்திரியின் உதவியாளர் என்று கூறி இந்த மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கைதுஇவர்களது இந்த மோசடியில் சோலாப்பூரை சேர்ந்த விஷால் ஓம்லே, புனேயை சேர்ந்த கிஷோர் மாலி ஆகிய மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.