அரூரில் பரபரப்பு: மதுக்கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் தர்ணா போராட்ட ம்

அரூரில் மதுக்கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-02 22:41 GMT

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் மேல்பட்சாபேட்டையில் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூட கோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த 150–க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு திரண்டனர். அப்போது திடீரென பெண்கள் மதுக்கடைக்கு பூட்டு போட்டு கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கடைக்கு வரும் மது வாங்க வரும் மதுபிரியர்கள் சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். இதனால் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மூட நடவடிக்கை

அப்போது மாவடட நிர்வாகத்துடன் பேசி ஒரு வாரத்தில் மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மதுக்கடைக்கு பூட்டு போட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்