மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும், விற்கவும்கூடாது என்று தடை விதித்து சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
காரைக்கால்,
இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசை கண்டித்து போராட்டங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் மத்திய அரசை கண்டித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அரசியல்குழு மாநில செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் நகு.செல்வசுந்தரம்(நிரவி–திருபட்டி னம்), வீ.தமிழரசி(நெடுங்காடு), ஆ.வல்லவன்(திருநள்ளாறு), க.கலைவாணன்(காரைக்கால்–தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை முதன்மை செயலாளர் பொதினிவளவன், அரசியல் குழு மாநில துணை செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் க.தமிழழகன், அரவரசன், பார்வேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.