கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்

கண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-06-02 22:00 GMT

கண்டமங்கலம்,

கண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் லோகநாதன், பழனி, விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் சவுரிராஜன், கோவிந்தராஜ் மற்றும் கண்டமங்கலம் ஒன்றியத்தில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கண்டமங்கலம் ரெயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால் அவசரகால ஊர்தி வந்தால் செல்லமுடியாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் ஆகவே பொது மக்கள் நலன் கருதி ரெயில்வே மேம்பாலம் கட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்டமங்கலம் பகுதி ஏராளமான பொது மக்கள் வந்து செல்லக்கூடிய மைய பகுதியாகவும் அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளதால் பொது கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பட உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்