இந்து முன்னணி சார்பில் சீமானுக்கு பன்றி இறைச்சியை பார்சலில் அனுப்பி வைத்தனர்

திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் சீமானுக்கு பன்றி இறைச்சியை பார்சலில் அனுப்பி வைத்தனர்

Update: 2017-06-02 23:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகர இந்து முன்னணி சார்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பன்றி இறைச்சி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன் நடந்தது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் மோகன், ரமேஷ், செய்தி தொடர்பாளர் முருகேஷ், செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், நகர செயலாளர் சந்தோஷ் உள்பட 50–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாட்டு இறைச்சிக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் மக்களுக்கு மாட்டு இறைச்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்த சீமானுக்கு, பன்றி இறைச்சியை அனுப்பி வைப்பதாகவும், இந்துக்கள் தெய்வமாக வழிபடும் பசுவை காப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட திருத்தத்தை ஆதரிக்கிறோம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கோபூஜை செய்து கொண்டாடப்படும் என்றும் இந்து முன்னணியினர் தெரிவித்தனர். மேலும் பன்றி இறைச்சியை பார்சல் செய்து தபால் நிலையம் மூலமாக சென்னையில் உள்ள சீமான் முகவரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்