தொழில் தொடங்குபவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் 30 பேர் பங்கேற்பு
திருவண்ணாமலையில் தொழில் தொடங்குபவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் 30 பேர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை,
படித்த வேலையில்லாத இளைஞர்கள், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டம்’ மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தொழில் மையத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிதம்பரம் தலைமை தாங்கி, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்கள் எந்த தொழில்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு அரசு வழங்கும் மானியங்கள் குறித்தும் வங்கிகளில் எவ்வாறு கடனுதவி பெற்று தொழில் தொடங்குவது குறித்து விளக்கி கூறினார்.
இதில் பெண்கள் உள்பட 30–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றும் (வெள்ளிக்கிழமை) கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.