மத்திய அரசின் தடை உத்தரவால் வெறிச்சோடிய நாகர்கோவில் மாட்டுச்சந்தை
மத்திய அரசின் தடை உத்தரவால் நாகர்கோவில் மாட்டுச்சந்தை வெறிச்சோடியது. நேற்று 30 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை தோறும் நாகர்கோவில் சரலூரில் இந்துக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சந்தையிலும், வெள்ளிக்கிழமையில் படந்தாலுமூட்டில் உள்ள சந்தையிலும், திங்கட்கிழமையில் திங்கள் சந்தையில் உள்ள சந்தையிலும் மாடு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் மத்திய அரசு, சந்தைகளில் இறைச்சிக்காக மாடு விற்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பலத்த எதிர்ப்பு கருத்துகளும், ஆதரவு கருத்துகளும் உருவாகி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, இந்த உத்தரவால் மாட்டுச் சந்தைகளில் மாடு விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடுகள் குறைந்தன
நாகர்கோவில் சரலூரில் உள்ள மாட்டுச்சந்தையில்விற்பனை வியாழக்கிழமைதோறும் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி 6.30 மணிக்கு முடிவடைந்து விடுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அதிலும் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம், மயிலாடி, தாமரைக்குளம், ஈத்தாமொழி பகுதிகளைச் சேர்ந்த மாடுகள்தான் இந்த சந்தையில் விற்பனை செய்வதற்காக விவசாயிகளால் கொண்டுவரப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 60 அல்லது 70 மாடுகள்தான் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது.
அவ்வாறு விற்பனைக்கு வரும் மாடுகளை குமரி மேற்கு மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.
வெறிச்சோடியது
இந்தநிலையில் சமீபத்தில் வெளியான மத்திய அரசின் தடை உத்தரவுக்குப்பிறகு நாகர்கோவில் சரலூர் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. ஆனால் வழக்கமாக வரக்கூடிய மாடுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவாகவே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் 30 மாடுகளே விற்பனைக்கு வந்திருந்தன. அதேபோல் மாடுகளை வாங்க வந்த வியாபாரிகளும் குறைவாகவே வந்திருந்தனர். ஆனாலும் நேற்று சந்தைக்கு விற்பனைக்கு வந்த 30 மாடுகளும் விற்பனை செய்யப்பட்டன. விற்பனைக்கு குறைவான மாடுகள் வந்ததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இதுதொடர்பாக நகராட்சி சந்தை குத்தகைதாரர் கூறியதாவது:-
காரணம் என்ன?
நாகர்கோவில் சரலூர் மாட்டுச்சந்தைக்கு வழக்கமாக வரும் மாடுகளை விட குறைவான எண்ணிக்கையில் தான் நேற்று மாடுகள் வந்தன. அதாவது 30 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. எனினும் சந்தைக்கு வந்த 30 மாடுகளும் விற்பனையானது. மத்திய அரசு போட்டுள்ள தடையின் காரணமாக மாடுகளை விற்பனை செய்ய வந்தவர்களின் எண்ணிக்கையும், வாங்க வந்த வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கலாம் என்றார்.