மணலி மண்டல அலுவலகம் முன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மணலி மண்டலத்தில் துப்புரவு தொழிலாளர்கள், மலேரியா தொழிலாளர்கள், பூங்கா ஊழியர்கள் என 425 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
திருவொற்றியூர்,
இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனவும், பணி உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் அதிகாரிகள், பெண் தொழிலாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த போது அதற்கு உடன்படாதவர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டதாகவும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செங்கொடி சங்கம் சார்பில் மணலி மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெண்கள் உள்பட ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.