மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருப்பட்டூர், 94 கரியமாணிக்கம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
சமயபுரம்,
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் காளை, சிங்கம், மயில், ஆட்டுக்கிடா போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இதில் திருப்பட்டூர், எதுமலை, வலையூர் போன்ற கிராம மக்கள் சார்பாக அம்மனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
94 கரியமாணிக்கம்
அதேபோல சமயபுரம் அருகே உள்ள 94 கரியமாணிக்கத்தில் மாரியம்மன் கோவிலில் கடந்த 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் இரவு ரிஷபம், யானை வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார். 28-ந் தேதி மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், திங்கட்கிழமை இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் 94 கரியமாணிக்கம், வலையூர், பாலையூர், எதுமலை போன்ற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மாலை நிலையை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணியன், பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலேந்திரன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
நேற்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) மாலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.