வைத்தியநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 50 பேர் காயம்
வைத்தியநாதபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயம் அடைந்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி வைத்தியநாதபுரம் அருகே உள்ள ஏரியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முன்னதாக தேரடி காளியம்மன் கோவிலிருந்து சீர்வரிசை ஏரியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் திருச்சி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
50 பேர் காயம்
காளைகள் முட்டியதில் அன்னிமங்கலத்தை சேர்ந்த கிருபா (வயது 30), டால்மியாபுரத்தை சேர்ந்த சதீஸ் (22), கோவண்டாகுறிச்சியை சேர்ந்த அருள்குமார் (20), கண்டராதித்தம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (60), இலந்தைகூடத்தை சேர்ந்த சுரேந்தர் (18) உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கிருபா மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம், வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், வேட்டி, சட்டை, புடவை, பீரோ போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வைத்தியநாதபுரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.