ஜமாபந்தியில் 149 மனுக்களுக்கு உடனடி ஆணை கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணும் பொருட்டு
காஞ்சீபுரம்,
ஜமாபந்தி நிகழ்ச்சி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்து வந்தது. பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட மனுக்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 14 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடி தீர்வு காண உத்தரவிடப்பட்டது.
ஜமாபந்தி நிறைவு நாளில் கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு 115 பட்டா மாற்றம், 16 முதியோர் உதவித்தொகை, 11 ரேஷன்கார்டு, 7 இதர மனுக்கள் என்று 149 மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டு அதற்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.எம்.பி. எழிலரசன், பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் தாசில்தார் கியூரி, வட்ட வழங்கல் அலுவலர் கலைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.