அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா மதுக்குடங்கள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

செங்கீரையில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் மதுக்குடங்களை எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2017-05-31 22:30 GMT
ராயவரம்,

அரிமளம் ஒன்றியம், ராயவரம் அருகே உள்ள செங்கீரையில் செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல கடந்த வாரம் வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் ஆயிங்குடி, குருந்தங்குடி, செங்கீரை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தென்னம் பாளைகள் மற்றும் நவதானிய பயிர்களால் ஆன மதுக்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து இரவு அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

திரளான பக்தர்கள்

பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரிமளம், ராயவரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரிமளம் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்