வளசரவாக்கத்தில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு வாலிபருடன் வந்த இளம்பெண் கைவரிசை

வளசரவாக்கத்தில், தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற இளம்பெண் மற்றும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நகை பறிப்பு சென்னை வளசரவாக்கம் ராஜேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் ராணி (வயது 35). நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள

Update: 2017-05-31 22:15 GMT

பூந்தமல்லி,

வளசரவாக்கத்தில், தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற இளம்பெண் மற்றும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை பறிப்பு

சென்னை வளசரவாக்கம் ராஜேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் ராணி (வயது 35). நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருக்கு பின்னால் சுடிதார் அணிந்தபடி ஒரு இளம்பெண் அமர்ந்து இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து இருந்த இளம்பெண் திடீரென, ரோட்டில் தனியாக நடந்து சென்ற ராணியின் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்தார். இதில் நிலைதடுமாறிய ராணி கீழே விழுந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் வேகமாக தப்பிச்சென்று விட்டனர்.

பெண் காயம்

கீழே விழுந்ததில் காயம் அடைந்த ராணி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் வாலிபர்கள்தான் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வாலிபருடன் இளம்பெண்ணும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்